;
Athirady Tamil News

நினைவேந்தல் பேரெழுச்சியை தடுப்பதற்கு அரசாங்கம் திட்டம் – சிவாஜீலிங்கம்!!

0

முள்ளிவாய்க்கால் பத்தாவது ஆண்டு நினைவேந்தல் பேரெழுச்சியை தடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற போதும் தாயகத்திலும,; புலத்திலும் தொப்புள் கொடியான தமிழ் நாட்டிலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் எழுச்சியாக நடாத்த வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் தவிசாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜீலிங்கம் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்..

இலங்கை அரசு வேண்டுமென்றே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் மாத்திரமல்லாது சிற்றூண்டிச் சாலை முகாமையாளர் என மூவரைக் கைது செய்தள்ளது. இவ்வாறு கைது செய்தமை தமிழ் மக்களிடத்தே அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது. இவ்வாறு அச்சுறுத்தல்களை விடுப்பதானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 10 ஆவது ஆண்டு நினைவேந்தலை அனுஷ்டிக்க விடாமல் தடுப்பதற்கான வேலைகளைச் செய்கிறதா என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் 16 ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலிலே வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அது இன்னும் இரண்டு வாரம் நீடிக்கப்படுமாக இருந்தால் மாணவ தலைவர்கள் அங்கே அந்த நினைவேந்தல் நிகழ்வுகிளில் பங்கு பற்ற முடியாது. இந்த மாதிரியாக மாணவ சமூதாயத்திற்கு; மிகப் பெரிய அளவில் அச்சுறுத்தப்பட்டுள்ளது.

மேலதிகமாக கடந்த ஆண்டு பிரபாகரனுடைய பிறந்ததினத்திற்கு கேக்கை வெட்டினோம் புலிகளின் பனர்களை வைத்திருந்தோம் என்று என் மீதும் வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் மற்றும் உறுப்பினர் என மூவர் மீது மே31 ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றத்திலே ஆஐராகுமாறு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இது கூட எங்களைப் பயமுறுத்துவதன் மூலம் மக்களைப் பயமுறுத்த முற்படுகின்றார்களா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

ஏனென்றால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் உள்ள துணை விதிகளின் கீழ் உங்களுக்கு வழக்கு தாக்கல் செய்யப்படுமென எங்களை விடுதலை செய்த அன்றே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறினார். ஆனால் இப்பொது நான்கு மாதங்கள் கடந்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனுடைய பின்னனி என்ன என்பது சற்று ஆராய்ந்த பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது.

எது எப்படி இரந்தாலும் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை வாரம் மே 12 ஆம் திகதியிலிருந்து மே 18 ஆம் திகதி வரை 21 இட்களிலே அனுஷ்டிக்க உள்ளோம். இறுதியாக முள்ளிவாய்க்காலில் நடாத்த அழைப்பு விடுத்தள்ளோம். ஆகவே சகல தமிழ் தேசிய அமைப்புக்களும் பொது மக்களும்; உணர்புபூர்வமாக தன்னெழுச்சியாக அங்கே ஒன்று கூட வேண்டும்.

இவ்வாறாக சென்னையிலே ஐல்லிக் கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் மக்கள் திரண்டது போல முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கும் மக்கள் திரள வேண்டும். அவ்வாறு எல்லோரும் முள்ளிவாய்க்காலை நோக்கி என்று அணிதிரளுவதனூடாக அரசிற்கும் சர்வதேசத்திற்கும் நாங்கள் ஒரு தெளிவான செய்தியை எடுத்துச் சொல்ல வேண்டும்.

அதாவது நாங்கள் சர்வதேச குற்றவியில் நீதிமன்றுக்கு இலங்கையை எடுத்துச் செல்ல வேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களிலே பொது சன வாக்கெடுப்பை ஐ.நா சபை மேற்பார்வையிலே நடாத்த வேண்டும். கட்டாயமாக காணாமலாக்கப்பட்ட பிரச்சனைகளுக்கு முடிவு வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளுடைய பிரச்சனைகளுக்கு முடிவு வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். தமிழர்களுடைய நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைகளை வலியுறுத்தக் கூடிய விதத்திலே பல்லாயிரக்கணக்கிலே திரண்டு புலம் பெயர் தேசங்களிலம் தொப்புள் கொடி உறவுகளான தமிழ் நாட்டிலும் பாரிய நிகழ்ச்சிகளை நடாத்த வேண்டும்.

எங்களுடைய தாயகத்திலும் இனப்படுகொலை நடைபெற்ற ஒவ்வொரு இடத்திலும் முள்ளிவாக்காலுக்கு வர முடியாதவர்கள் ஆலயங்களிலேயும் ஒன்று கூடி ஆன்ம ஈடேற்றத்திற்காக வீடுகளிலே அல்லது வீட்டுக்கு வெளியே உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 6 =

*