;
Athirady Tamil News

கொட்டகலை ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் கும்பாபிஷேக பெருவிழா!! (படங்கள்)

0

மத்திய மலைநாட்டில் கொட்டகலை நகருக்கு அருகில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா 10.05.2019 அன்று நடைபெற்றது.

08.05.2019 சனிக்கிழமையுடன் ஆரம்பித்த கிரியாரம்பத்தை தொடர்ந்து 09.05.2019 அன்று எண்ணெய் காப்பு நடைபெற்றதுடன் 10.04.2019 அன்று காலை மஹாகும்பாபிஷேக பெருச்சாந்தி பெருவிழா நடைபெற்றது.

கிரியா கலாபமணி கிரியாகிரம சிவஸ்ரீ.ச.ஸ்கந்தராஜா குருக்களால் செய்து வைக்கப்பட்ட இந்த மஹா கும்பாபிஷேகத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், கொட்டகலை பிரதேச சபை தலைவர் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + fifteen =

*