;
Athirady Tamil News

எந்தவொரு நாட்டினதும் இராணுவ உதவி தேவையில்லை – இராணுவத் தளபதி!! (வீடியோ)

0

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்கு பிறகு தோன்றியிருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவரத்தை கையாளுவதற்கு எந்தவொரு நாட்டினதும் இராணுவ உதவி இலங்கைக்கு தேலையில்லை என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தியா ருடே தொலைக்காட்சிக்கு நேர்காணல் ஒன்றை வழங்கிய இராணுவ தளபதி வேறு எந்த நாட்டினதும் படைகள் இலங்கைக்கு வருவதை நாம் ஒருபோதும் உற்சாகப்படுத்துவதில்லை.

நமக்கு தேவைப்படுவது விசாரணைகளுக்கான உதவியும், எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஆற்றல்களை மேம்படுத்துவதற்கு தொழிநுட்ப உதவிகளுமே ஆகும். எமக்கு அவசியமாக தேவைப்படுகின்ற நேரத்தில் உதவ முன்வருகின்ற உண்மையான நண்பர்களை நாம் வரவேற்போம். இந்திய இராணுவத்துடனான எமது உறவுகளும் அயல் நாடுகளுடனான குறிப்பாக இந்தியாவுடனான இராணுவ இராஜதந்திரமும் சிறப்பான நிலையிலேயே இருக்கின்றது என்று குறிப்பிட்டார்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம்களுடன் அரசியலில் ஈடுபட்டதில்லை!!

இன்று தாக்குதல் நடத்துவதற்கான அச்சுறுத்தலும் இல்லை – பாதுகாப்புப் பிரிவு!!

கொபேகனே மற்றும் ரஸ்நாயக்கபுர பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம்!!

நாளை காலை 4 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம்!!

ருவன் விஜேவர்தன பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமனம்!!

வவுனியாவில் ரி56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கபட்டுள்ளது.!!

முஸ்லிம் சமூகம் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + 4 =

*