;
Athirady Tamil News

நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு – பாதுகாப்பு படை பிரதானி!!

0

வன்முறைச் சம்பவங்களினால் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுகின்றது என பாதுகாப்பு படை பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பங்கேற்று நாட்டின் தற்போதைய நிலை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “இவ்வாறான சந்தர்ப்பத்தில் பொய்யான பிரச்சாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது.

அதே சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு துறையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவதுடன், வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடவேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

சிலாபம், பிங்கிரிய பகுதிகளிலும் இன்று செட்டிகுளம் பகுதியிலும் சிலதினங்களுக்கு முன்னர் நீர்கொழும்பு பகுதியிலும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.

நாட்டின் அமைதியை குலைப்பதற்காகவும் படையினரால் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலுமே இத்தகைய செயல்கள் மேற்கொள்ளப்பட்டுகின்றன.

ஆகவே, இத்தகைய தாக்குதல் சம்பவங்களுக்கு துணைபோக வேண்டாம் என அனைவரிடமும் கேட்டுக் கொள்கின்றேன்“ என குறிப்பிட்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

ரிசாட்டிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு – மஹிந்த அணி!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × three =

*