;
Athirady Tamil News

கால்பந்தாட்டத்தில் புங்குடுதீவு நசேரத் அணி வெற்றி!!

0

யாழ்ப்பாணம் வேலனை பிரதேச செயலக இளைஞர் கழகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான கால்பந்தாட்டத் தொடரில் புங்குடுதீவு நசேரத் இளைஞர் கழக சம்மேளன அணி கிண்ணம் வென்றது.

அல்லைப்பிட்டி சென்.பீலிப் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் புங்குடுதீவு நசேரத் இளைஞர் கழக அணியை எதிர்த்து அல்லைப்பிட்டி சென்.பீலீப் இளைஞர் கழக அணி மோதியது.

2:0 என்ற கோல் கணக்கில் புங்குடுதீவு நசேரத் இளைஞர் கழக அணி கிண்ணம் வென்றது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − 3 =

*