;
Athirady Tamil News

அட்டன் செனன் பகுதியில் கசிப்பு தயாரிப்பு; ழூவர் கைது!! (படங்கள்)

0

அட்டன் செனன் பகுதியில் கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ழூவர் கைது உபகரணங்கள் மீட்பு.

அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அட்டன் செனன் கே எம் தோட்டபகுதியில் மீன் வளர்ப்பு மேற்கொள்ளபட்டுவரும் கூடாரம் ஒன்றில் சட்டவிரோதமாக கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டுவந்த ழூன்று சந்தேக நபர்களை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர் இந்த சம்பவம் 14.05.2019.திங்கள் கிழமை இரவு கைது செய்யபட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கு அமைய அட்டன் குற்றதடுப்பு பிரிவின் நிலைய பொருப்பதிகாரி பிரதீப் தலைமையில் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போது இந்த ழூன்று சந்தேக நபர்களும் கைது செய்யபட்டுள்ளதோடு கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தபட்ட கேஸ் சிலின்டர் அடுப்பு கசிப்பு தயாரிக்கபயன் படுத்தபடும் ஸ்பிரீட் மற்றும் ஏனய உபகரனங்களும் மீட்கபட்டுள்ளதாக அட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனவே இந்த கசிப்பு உற்பத்தியானது மக்களுக்கு விற்பனை செய்வதற்காக தயாரிக்கபட்டு வந்துள்ளதாகவும் அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர் கைது செய்யபட்ட ழூன்று சந்தேக நபர்களும் 15.05.2019.செவ்வாய்கிழமை அட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கையினை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × four =

*