;
Athirady Tamil News

மோட்டார் சைக்கிள் சறுக்கியதில் ஒருவர் பலி!!

0

கடவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடவத்த – ராகம வீதியில் பயணித்த கன்டேனர் ரக வாகனம் ஒன்றை மோட்டர் சைக்கிள் ஒன்று முந்திச் செல்ல முற்பட்ட போது இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மோட்டார் சைக்கிள் சறுக்கிச் சென்று கன்டேனர் வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று (13) மாலை 5.35 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

ராகம, பேரலந்த பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நிரஞ்சன் பிரபாத் எனும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கன்டேனர் வாகனத்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கடவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + fifteen =

*