மாணவர்களின் விடுதலை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் விடுவிக்கக் கோரி மாணவர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாக முன்றலில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நாளை புதன்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.
மாணவர்கள் உள்ளிட்ட மூவருக்கும் இடையிலான வழக்கு நாளைமறுதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ள நிலையில் சட்ட மா அதிபர் மூவரின் விடுதலை தொடர்பில் உரிய அறிவுறுத்தலை வழங்கவேண்டும் என்று இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் வலியுறுத்தவுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் மீட்கப்பட்டன.
அதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளரையும் வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாணவர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக சட்ட மா அதிபர் தன்னிடம் தெரிவித்தார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருந்தார். அத்துடன் நேற்று திங்கட்கிழமை மாணவர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்படுவார்கள் என்று சட்ட மா அதிபர் தெரிவித்தார் என ஜனாதிபதியின் செயலாளர் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளிடம் கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தார்.
அத்தனை மட்டங்களிலும் முயற்சித்தும் பயன்கிடைக்காத்தால் இந்த அமைதிவழிப் போராட்டத்தை நாளை நடத்த உள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
யாழ்.பல்கலை. மாணவர்கள் மறியல்; சட்ட மா அதிபர் முடிவெடுப்பார்!!
வடமேல் மாகாணத்துக்கு மாலை 06 மணி முதல் ஊரடங்கு சட்டம் !! (வீடியோ)
வன்செயல்களை தடுக்க பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுக்கவில்லை! – TNA குற்றச்சாட்டு!! (வீடியோ)
விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் நீடித்தது இந்தியா!! (வீடியோ)
NTJ உள்ளிட்ட மூன்று அமைப்புக்களின் தடை தொடர்பான வர்த்தமானி வௌியீடு!! (வீடியோ)
பொறுமையுடன் செயல்படுவது பொலிஸாரின் பலவீனம் என எண்ணக்கூடாது!!
வடமேல் மாகாணத்தில் ஒருவர் உயிரிழப்பு – பல கோடி ரூபா உடமைகள் அழிப்பு!! (படங்கள், வீடியோ)
வடமேல் மாகாணத்திற்கான பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்ததப்பட்டது!!
நபரை கண்டுபிடிக்க மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!! (வீடியோ, (படங்கள்))
அடுத்த தாக்குதல்கள் இந்து அல்லது பௌத்த இடமாக இருக்கலாம்!! (வீடியோ)
ரிசாட்டிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு – மஹிந்த அணி!! (வீடியோ)