;
Athirady Tamil News

தொடர்ந்து வாக்குவாதம் செய்ததால் கல்லை தலையில் போட்டு மகளை கொன்ற தாய் கைது..!!

0

மகாராஷ்டிரா மாநிலத்தின் பூனே நகரத்தில் வசிப்பவர் சஞ்சீவனி பூபதே(34). இவரது மகள், ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த ஒருவரை காதலித்து கடுமையான எதிர்ப்புக்கிடையில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து ஓராண்டு ஆன நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த சிறு சிறு தகராறு பெரிதாக மாறவே, அந்த பெண் கணவர் வீட்டை விட்டு வெளியேறி தனது வீட்டிற்கு வந்திருந்தார். சஞ்சீவனி எத்தனையோ முறை மருமகன் வீட்டிற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தி வந்துள்ளார். ஆனால், அவருக்கு மீண்டும் சேர்ந்து வாழ விருப்பமில்லை. இதையடுத்து அந்த பெண், தனது கணவர் தன்னை கற்பழித்ததாகவும், கொடுமை செய்ததாகவும் போலீசாரிடம் புகார் கொடுத்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். சில நாட்கள் கழித்து மீண்டும் சஞ்சீவனியை கணவரிடம் சேர்ந்து வாழ விரும்பி பேச்சு வார்த்தை நடத்த கூறி சஞ்சீவனியை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். சஞ்சீவனியும் மருமகன் மீது போடப்பட்ட வழக்கினை திரும்பப்பெற்று கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். ஆனால், மருமகனோ, மீண்டும் சேர்ந்து வாழ விருப்பமின்றி மறுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை அந்த பெண், தாய் சரியாக பேச்சு வார்த்தை நடத்தவில்லை எனவும், கணவருடன் சேர்த்து வைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனவும் குறை கூறி சஞ்சீவனியிடம் தொடர்ந்து வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் ஆத்திரம் தாங்காத சஞ்சீவனி, பெரிய கல்லை எடுத்து மகளின் தலையில் போட்டுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே மகள் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சஞ்சீவனியை கைது செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 1 =

*