;
Athirady Tamil News

குகனின் 20 ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு!! (படங்கள்)

0

தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளர் குகனின் 20 ஆவது நினைவு தினம் அனுஸ்டிப்பு!!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பாளரும் மத்திய குழு உறுப்பினருமாக கிறிஸ்டி குகராஜா (குகன்) படுகொலை செய்யப்பட்ட 20 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (15.05.2019) மாலை வவுனியா வைரவப்புளிங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாகவுள்ள அன்னாரின் நினைவுத் தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது.

சிறி தமிழீழ விடுதலை இயக்கத்தின் (சிறி ரெலோ) அமைப்பின் வவுனியா மாவட்ட இளைஞர் அணி தலைவர் ப.கார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார்(கண்ணா), வவுனியா மாவட்ட சமாதான நீதிமான்கள் சங்கத்தின் செயலாளர் மாணிக்கம் ஜெகன், கட்சியின் தோழர்கள், உறவினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × five =

*