;
Athirady Tamil News

வவுனியாவில் கஞ்சாவுடன் கைது!! (வீடியோ)

0

வவுனியாவில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றவர் ஹெரோயினுடன் கைது!

வவுனியா, பண்டாரிகுளம் பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற தண்டனை பெற்றவர் மீண்டும் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவு பொலிசார் நேற்று இரவு (15.05) பண்டாரிகுளம் பகுதியில் சென்ற நபர் ஒருவரை சோதனைக்குட்படுத்திய போது அவரது உடமையிலிருந்து ஒரு கிராம் 240 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டுள்ளனர்.

குறித்த நபர் பண்டாரிக்குளம் பகுதியிலுள்ள பாடசாலைக்கு முன்பாக உள்ள வியாபார நிலையத்தில் வைத்து கடந்த மாதம் கேரளா கஞ்சா பொதியுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத் தண்டனை பெற்றுள்ளார் என்பது பொலிசாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குறித்த நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

மன்னாரில் பதற்றம்; கைக்குண்டை வெடிக்க வைக்க முயற்சித்தவர் கைது!! (படங்கள்)

கைது செய்யப்பட்ட யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை!! (படங்கள்)

ரிஷாட்க்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் சமர்பிப்பு!!

பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி ஹரீஸ்.!! (படங்கள்)

யாழ் பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் சோதனை!!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + nine =

*