;
Athirady Tamil News

குளவி கொட்டுக்கிழக்காகி 6 பேர் பாதிப்பு!! (படங்கள்)

0

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை பாமஸ்டன் தோட்டத்தில் 16.05.2019 அன்று முற்பகல் 12 மணியளவில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 6 பேர் குளவிகொட்டுக்கு இழக்காகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மரம் ஒன்றில் இருந்த குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுமதிக்கப்பட்ட 6 பேரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குளவி கொட்டுக்கு இழக்கானவர்களில் 5 பேர் பெண் தொழிலாளர்கள் எனவும் ஒருவர் ஆண் தொழிலாளர் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 15 =

*