;
Athirady Tamil News

வவு. கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மத தலைவர்களின் கலந்துரையாடல்!! (படங்கள்)

0

வவுனியாவில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மத தலைவர்களின் கலந்துரையாடல் இன்று (16) மாலை நடைபெற்றது.
தேசிய சமாதானப் பேரவை மற்றும் வவுனியா சர்வமத குழுவும் இணைந்து ஏற்பாடு செய்த இந் நிகழ்வானது குருமன்காட்டில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கிராம அபிவிருத்தி நிறுவனத்தின் செயலாளர் ஏ.ஆர்.ஏ. ரமீஸ் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடல் நிகழ்வில் வவுனியா பிரதேசத்தை சேர்ந்த கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மதகுருமார்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு என்னும் தலைப்பில் நடைபெற்ற இக் கலந்துரையாடலானது பாதிக்கப்பட்ட இரண்டு சமய சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை கட்டி எழுப்பும் நோக்கத்துடன் நடைபெற்றது.

கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மத தலைவர்கள் கலந்துகொண்டிருந்த இக்கலந்துரையாடலில் மத நல்லிணக்கம் தொடர்பாக கலந்துரையாடியதுடன் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தவர்களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முஸ்லிம் மத தலைவர்களால் பதில் வழங்கப்பட்டிருந்தது.

அத்துடன் எதிர்காலத்தில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மத தலைவர்களால் சமய நலிலிணக்கம் தொடர்பாக மக்களிடையே கலந்துரையாடல் மற்றும் பிரச்சாரம் முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.

நிகழ்வில் வவுனியா சமூக பொலிஸ் பிரிவு அதிகாரி சி.எம்.அரவிந்த, அருட் தந்தை எஸ்.ராஜநாயகம், போதகர் பி.என்.சேகர், மௌலவிகளான அப்துல் சமட் முகமட், எம்.எஸ். அமீனுதீன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
கலந்துரையாடல் நிகழ்வை தொடர்ந்து நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வும் நடைபெற்றது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த M. ரிஸ்வான் கைது!! (வீடியோ)

ரிஷாத்துக்கு எதிரான பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ன? (வீடியோ)

புத்தபெருமான் கூறிச் சென்ற நல்வழியில் பணிப்போம் – சபாநாயகர்!! (வீடியோ)

வவுனியாவில் கஞ்சாவுடன் கைது!! (வீடியோ)

மன்னாரில் பதற்றம்; கைக்குண்டை வெடிக்க வைக்க முயற்சித்தவர் கைது!! (படங்கள்)

கைது செய்யப்பட்ட யாழ். பல்கலை மாணவர்கள் பிணையில் விடுதலை!! (படங்கள்)

ரிஷாட்க்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் சமர்பிப்பு!!

பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறி ஹரீஸ்.!! (படங்கள்)

யாழ் பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் சோதனை!!! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × five =

*