;
Athirady Tamil News

உழவியந்திரத்தில் பயணித்த வவுனியா நகரபிதா!! (படங்கள்)

0

வடமாகாண அதிகாரிகளின் புறக்கணிப்பால் வவுனியா நகரசபையில் வாகனபற்றாகுறை நிலவுவதாக தெரிவித்து நகரபிதா இ.கௌதமன் அவரது வீட்டில் இருந்து குப்பை அகற்றும் உழவியந்திரத்தில் பயணித்து நேற்றயதினம் நகரசபைஅலுவலகத்திற்கு சென்றிருந்தார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நகரபிதா இ.கௌதமன்…

வடமாகாண அதிகாரிகளின் புறக்கணிப்பால் வவுனியா நகரசபைக்குட்பட்ட மக்களின் தேவைகளை பூர்திசெய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டுவருடமாக நகரசபைக்கு வாகனங்கள் தேவை என்று உரியதிணைக்களங்களிற்கு தெரியபடுத்திவருகிறோம். அவர்கள் இது தொடர்பாக கரிசனை கொள்கிறார்கள் இல்லை.நாம் அவர்களின் சொந்த பணத்தில் வாகனம் கேட்கவில்லை எமது சபையிடம் உள்ள நிதியில் வாகனம் வாங்குவதற்கான அனுமதியை தருமாறே கோருகிறோம் அதனை கூட அவர்கள் தருகிறார்கள் இல்லை.

வவுனியா என்றால் வெறுமனே அகதிமுகாம்களிற்காக உருவாக்கபட்ட மாவட்டமாகவே அனைவரும் நினைக்கிறார்கள். யாழ்பாணத்தில் இருப்பவர்கள் இறைவனால் ஆசிர்வதிக்கபட்டவர்களாகவும், வவுனியாவில் இருப்பவர்கள் தீண்டதகாதவர்களாகவுமே வடமாகாண அதிகாரிகள் பார்கிறார்கள்.நகரசபையை மாநாகரசபையாக தரமுயரத்தகூடிய நிலை இருந்தும் அது அவர்களாலேயே தடைபடுகின்றது.

மக்களின் தேவைகளிற்காகவும் வருமானத்தை அதிகரிப்பதற்குமாகவே நாம் இந்த தேவைகளை கோருகிறோம். இதனால் மக்களிற்கு செய்யவேண்டிய பல சேவைகள் தடைப்பட்டு வருகின்றது. தற்போது பயன்படுத்தபடும் வாகனங்கள் அதிகமாக பழுதடைந்து வருவதுடன் அதனை திருத்துவதற்காக பயன்படுத்திய நிதியில் புதிய வாகனத்தையே கொள்வனவு செய்திருக்கமுடியும். எனவே உரியதரப்புகள் வாகன வசதிகளை ஏற்படுத்தி தர முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

இதேவளை கலந்துரையாடல் ஒன்றிற்காக வடமாகாண ஆளுனர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அதில் பங்கெடுப்பதற்காக நகரபிதாவிற்கு பதிலாக உபநகரபிதா சு.குமாரசாமி குறித்த கூட்டத்திற்கு நேற்றுமுன்தினம் சென்றிருந்தார். கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் அவர் பயணித்த வாகனம் பழுதடைந்து நின்றுள்ளது. இதனால் குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியாமல்,அதனை திருத்துவதற்கும் பல்வேறு நடைமுறைகள் இருப்பதனால் அதனை பழுதுபார்கும் நிலையம் ஓன்றில் நிறுத்திவிட்டு உபநகபிதாவும்,சாரதியும் பேருந்தில் ஏறி மீண்டும் வவுனியாவை வந்தடைந்திருந்தனர்.

வாகனம் மற்றும் ஆளணி பற்றாகுறை காரணமாக கடந்தவருடமும் நகரபிதா குப்பை அகற்றும் உழிவியந்திரத்தில் பயணம் செய்திருந்தநிலையில் தற்போது மீண்டும் பயணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவளை வடமாகாணத்தின் முக்கிய உள்ளூராட்சி சபையாக காணப்படும் வவுனியா நகரசபைக்கு உரியவசதிகள் செய்து தரப்படாமையிட்டு பொதுமக்கள் மத்தியில் விமர்சனங்கள் முன்வைக்கபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + three =

*