;
Athirady Tamil News

மலையகத்தில் வெசாக் கொண்டாட்டங்கள் ஏற்பாடு!! (படங்கள்)

0

மலையகத்தில் சமயங்களிடையே நல்லிணக்கம் ஏற்படும் வகையில் வெசாக் கொண்டாட்டங்கள் ஏற்பாடு

நாட்டில் ஏற்பட்ட குண்டுவெடிப்பினை தொடர்ந்து சமயங்களுக்கிடையிலான நல்லிணக்கம் சீர்குலைந்ததுடன் மக்கள் மத்தியில் அச்ச நிலையினையும் குரோத மனப்பான்மையினையும் தோற்றுவித்தன.இந்நிலை காரணமாக நகரங்களுக்கு மக்கள் வருவதை தவிர்த்துக்கொண்டனர்.

இந்த நிலைமைகளை இல்லாதொழிக்கும் வகையில் மலையகப்பகுதிகளில் வெசாக் கொண்டாட்டங்களை மூவின மக்களும் இணைந்து ஏற்பாடு செய்து வருவது ஒரு விசேட அம்சமாகும்.

புத்தபெருமானின் பிறப்பு இறப்பு பரிநிர்மாணம் ஆகிய மூன்று அம்சங்களையும் நினைவு கூறும் வெசாக் பௌர்ணமி நாளையதினம் மலரவுள்ளது.இந்த வெசாக் தினத்தை முன்னிட்டு மலையகத்தில் உள்ள நகரங்களில் தமிழ் , சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் இணைந்து வெசாக் அலங்கார கூடுகளையும் பௌத்த கொடிகளையும் கட்டி அலங்கரித்து வருகின்றனர்.

தமிழ் வீடுகளிலும் இம்முறை வெசாக் அலங்கார கூடுகள் தொங்கவிடப்பட்டிருந்தன இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சமயங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்பளிப்பதோடு சமயங்களில் உள்ள ஆன்மீகக்கருத்துக்களையும் சமூக சார்ந்த விழுமிய பண்புகளையும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுமென பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 8 =

*