;
Athirady Tamil News

விபத்தில் ஒருவர் பலி – 8 பேர் காயம்!!

0

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குருதுகஹஹெதெக்ம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

கொடகம பகுதியில் இருந்து கடவத்த திசையில் பயணித்த வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் நாகொட மற்றும் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்தில் பலத்த காயமடைந்த ஓட்டுனர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை பகுதியை சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 1 =

*