;
Athirady Tamil News

பயங்கரவாத குற்றம் சாட்டப்பட்ட ரிசாட்னை ஏன் விசாரிக்க முடியாது – பிரதீபன்!!

0

பிரச்சினை தீர்க்க சென்ற பொதுச்செயலாளர் தயாசிறியினை விசாரிக்க் முடியுமென்றால் பயங்கரவாத குற்றம் சாட்டப்பட்ட ரிசாட் பதுர்தீனை ஏன் விசாரிக்க முடியாது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவிப்பு.

நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற அசாம்பாவித சம்பங்களுக்காக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகரவிடம் பொலிஸார் மூன்றரை மணிநேர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கு முன் யாழ்பாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போது ராஜங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் புலிகளுக்கு ஆதரவாக பேசினார்.

என்று கூறி அவரின் அமைச்சுப்பதவி பறிக்கப்பட்டதுடன் அவருக்கு எதிராக பாராளுமன்றத்திலும் நடடிவடிக்கை எடுத்திருந்திருந்தார்கள். அப்படி என்றால் இன்று நாட்டில் பாரிய அழிவினை ஏற்படுத்திய பயங்கரவாதிகளுக்கு அமைச்சர் ரிசாட் பதுர் தீன் கிழக்கு மாகாண ஆளுநர் இஸ்புல்ல உள்ளிட்டவர்கள் மீது பாரிய அனவில் குற்றம் சுமத்தப்படுகிறது.; ஏன் அவர்களுக்கு எதிராக அரசாங்கம் எவ்வித நடடிவக்கையும் எடுக்க வில்லை.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் மஸ்கெலியா பிரதேசசபையின் உபதலைவருமான பிரசாமி பிரதீபன்.

இன்று (19) திகதி அட்டன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சயின் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இந்த நாட்டில் தீவிரவாத செயப்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக அரசாங்கம் கூறிவந்த போதிலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. மக்கள் மறந்திருந்த ரானுவத்தினரை மீண்டும் நினைவு கூறும் அளவுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 10 வருடகாலமாக நாட்டை பாதுகாத்து வந்த இரானுவத்தினரை மறந்து அரசாங்கம் அந்த இரானுவத்தினரை நினைவுகூறும் சம்பவமாக இன்று நடைபெறுகின்றன. இந்த அரசாங்கத்தில் அங்கத்துவகித்து வருகின்ற அமைச்சர் ஆளுநர்கள் பயங்கரவாத தொடர்பு பட்டிருப்பதாக பலரால் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றன.

குற்றம் சுமததப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை முறையாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.கடந்த 21 ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலின் பின் அரசாங்கம் நாளுக்கு நாள் கருத்தக்களை மாறி மாறி கூறிவருகிறது. முதலில் முஸ்லிம்களின் ஆடைகள் தொடர்பாக கூறப்பட்ட கருத்துக்கள் தற்போது மாற்றம் பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் பார்க்கும் எதிர்காலத்தில் நடைபெறவிருக்கின்ற பொது தேர்தல் , ஜனாதிபதி தேர்தல் ஆகிய வற்றை இலக்கு வைத்து முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் சூழ்ச்சியாக அமைக்கின்றதோ என் சந்தேகம் ஏற்படுகின்றது.

இவற்றை எல்லாம் உற்று நோக்கும் போது ஒன்று மாத்திரம் தெளிவாகின்றது பொது மக்கள் எவ்வித அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தாலும் கூட பரவாயில்லை. என்ற சூழ்நிலை காணப்படுகின்றது. இதனால் இன்று மாணவர்கள் அச்சமின்றி பாடசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது மக்கள் நகரங்களுக்கு பயமின்றி வர முடியாத நிலை காணப்படுகின்றது. வேலை தளங்கயுளுக்கு செல்ல முடியாத நிலையே காணப்படுகின்றது அரசாங்கம் பயங்கர வாதத்தினை முற்று முழுவதுமாக ஒழித்து விட்டோம்.

என்று உத்தரவாத்தினை தர முடியாத நிலையிலேயே அரசாங்கம் உள்ளதாக தெரிவித்த அவர் இன்று அமைச்சர் ரிசாட் பதுர்தீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு வழங்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

ஒரு தொகை தோட்டக்கள் மற்றும் இராணுவ சீருடை கண்டுபிடிப்பு!! (வீடியோ)

ரணில்லை பிரதமராக்கி நாம் தவறிழைத்துவிட்டோம் – அத்துரலியே ரத்ன தேரர்!! (வீடியோ)

ரிஷாட்க்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – தமிழரசு கட்சி ஆதரவு!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + 9 =

*