;
Athirady Tamil News

ஈஸ்டர் தாக்குதலின் ஒரு மாத பூர்த்தி – வடமாகாண ஆளுநரின் விசேட வேண்டுகோள்!!

0

இலங்கையில் பல பாகங்களிலும் கடந்த மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் ஒரு மாத பூர்த்தியினை நினைவுகூரும் முகமாக நாளை 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8:45 மணிக்கு வட மாகாணத்தின் அனைத்து சமய வழிபாட்டுத் தலங்களிலும் மணியோசை ஒலிக்க செய்ய வேண்டும் என வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் ஒரு நிமிட மௌன அஞ்சலியினையும் மேற்கொள்ளுமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வடமாகாணத்தின் அனைத்து சமயத் தலைவர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த தருணத்தில் வட மாகாணத்தின் அனைத்து மக்களையும் இணைந்து கொள்ளுமாறும் ஆளுநர் அவர்கள் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.

வடக்கு ஆளுநரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − ten =

*