;
Athirady Tamil News

பூஜித் மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!! (வீடியோ)

0

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான மனு எதிர்வரும் 31ம் திகதி விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனு இன்று நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, எல்.டி.பி. தெஹிதெனிய மற்றும் ப்ரீதி பத்மன் சுரசேன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொழும்பு உள்ளிட்ட மூன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையின் காரணமாக பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டய, வென்னவத்தையைச் சேர்ந்த சமன் நந்தன சிறிமான்ன என்ற நபரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதிவாதிகளின் கவனயீனத்தால் ஏற்பட்ட மனித படுகொலைகள் மற்றும் காயமேற்பட்ட சம்பவத்தில் குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை எடுக்க சட்ட மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸஹ்ரான் உயிரிழந்தமை DNA பரிசோதனையில் உறுதி!! (வீடியோ)

NTJ உறுப்பினரை விடுவிக்க இலஞ்சம் கொடுக்க முற்பட்டவரின் விளக்கமறியல் நீடிப்பு!! (வீடியோ)

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனை!!

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா பிணையில் விடுதலை!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − 7 =

*