;
Athirady Tamil News

ஒன்பதாவது போர் வீரர்கள் நினைவு தினம் ஆனையிறவில் அனுஷ்டிப்பு!! (படங்கள், வீடியோ)

0

இறுதி யுத்தத்தில் தமது உயிர்களை நாட்டிற்காக தியாகம் செய்த முப்படையினரையும் கௌரவிக்கும் விதமாக, ஒன்பதாவது போர் வீரர்கள் நினைவு தினம் இன்று (21) அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வு ஆனையிறவில் உள்ள நினைவு தூபிக்கு முன்பாக இன்று மாலை நான்கு முப்பது மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது இராணுவ வீரர்களின் நினைவுத்தூபிக்கு இராணுவ அதிகாரிகளால் மரியாதை செலுத்தப்பட்டதுடன் பிரதம அதிதிகளினால் நினைவுத் தூபிக்கு மலர்ச்செண்டு வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், சர்வ மத வழிபாடுகளும் இங்கு இடம்பெற்றதுடன்,

யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சி, , சர்வ மத தலைவர்கள். இராணுவ அதிகாரிகள் ,ராணுவ வீரர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

குறித்த நிகழ்வு முதல்முறையாக இம்முறை ஆனையிறவு பகுதியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”


பூஜித் மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!! (வீடியோ)

ஸஹ்ரான் உயிரிழந்தமை DNA பரிசோதனையில் உறுதி!! (வீடியோ)

NTJ உறுப்பினரை விடுவிக்க இலஞ்சம் கொடுக்க முற்பட்டவரின் விளக்கமறியல் நீடிப்பு!! (வீடியோ)

மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனை!!

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா பிணையில் விடுதலை!! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × one =

*