;
Athirady Tamil News

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!!

0

ஹோமாகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹபரகட பிரதேசத்தில் ஒரு கிலோவும் 300 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைதாகியுள்ளார்.

பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று இரவு இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபரிடம் இருந்து போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், 27 வயதுடைய சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தனது வயதை ஒத்த உயிரிழந்த நபர் ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தியுள்ளமையும் தெரிய வந்துள்ளது.

இன்று சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − five =

*