;
Athirady Tamil News

தொடர் மின் விநியோகத்தை உறுதி செய்ய அவசர எரிசக்தி கொள்வனவு!!

0

தொடர்ச்சியாக மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவைக் குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துடவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்பொழுது ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை தீர்ப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, இடைக்கால மற்றம் நீண்டகால நடைமுறைகள் தொடர்பில் சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக பிரதமர் தலைமையில் மற்றும் நிதி, மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சரின் வழிகாட்டல் மற்றும் பெருந்தெருக்கல் மற்றும் வீதி அபிவிருத்தி , கனிய வள அபிவிருத்தி மற்றும் துறைமுகம் மற்றும் கடல் நடவடிக்கைகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி ஆகிய அமைச்சர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைவாக நாட்டில் தொடர்ச்சியாக மின் விநியோகத்தை முன்னெடுப்பதற்காக, தற்பொழுது மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அமைவாக அவசர எரிசக்தியை கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கெரவலப்பிட்டியில் அமைக்கப்பட்டுள்ள 200மெகா வோல்ட் அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடக்கம் எதிர்வரும் 6 மாத காலத்திற்காக ஒரு மின் அலகை 26.20 ரூபா வீதம் கொள்வனவு செய்வதற்காகவும், காலியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 200 மெகாவோல்ட் அனல் மின் நிலையத்தின் மூலம் 2019 செப்டெம்பர் மாதம் தொடக்கம் எதிர்வரும் 9 மாத காலத்திற்கு ஒரு மின் அலகு மின்சாரத்தை 26.20 ரூபா வீதம் கொள்வனவு செய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 5 =

*