;
Athirady Tamil News

போராளி இளைஞனுக்கு வாழ்வளித்த சீயோன் தேவசபை திருச்சபை!! (படங்கள்)

0

வவுனியாவில் முன்னாள் போராளி இளைஞனுக்கு வாழ்வளித்த தமிழ் சீயோன் தேவசபை திருச்சபை

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில் குண்டுத்தாக்குதலில் சிக்குண்டு இடுப்புக்கு கீழ் இயங்காத நிலையில் சக்கரநாற்காலியில் தனது வாழ்க்கையினை முன்னேடுத்து வரும் வவுனியா சிவபுரத்தினை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (சுதா) என்பவருக்கு கனடா மொன்றியல் தமிழ் சீயோன் தேவசபை திருச்சபையினரினால் சுமார் இரண்டு லட்சத்தி எழுபதாயிரம் ரூபா நிதி பங்களிப்பில் மலசலகூட வசதியுடன் கூடிய வீடோன்று நிர்மானிக்கப்பட்டு கையளிக்கும் நிகழ்வு இன்று (22.05.2019) காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.

பூந்தோட்டம் மிஸ்பா ஆலயத்தின் போதகர் சந்திரகுமார் அவர்களின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இவ் வீட்டினை கனடாவிலிருந்து வருகை தந்திருந்த போதகர் காலேப் குலநாதன் அவர்களுடன் இணைந்து அவரது துணைவி செரின் மற்றும் மகள் இணைந்து கல்வெட்டினை திரைநீக்கம் செய்து வைத்ததுடன் நாடா வெட்டி வீட்டினை திறந்து வைத்தனர்.

குறித்த நபர் (ஜெகதீஸ்வரன் (சுதா) ) தகரகொட்டகை வீட்டில் எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் அவரது வாழ்வாதாரத்தினை முன்னேடுத்து வந்த நிலையில் அவருக்கு மறுவாழ்வளிக்கும் நோக்கில் இவ் வீடு நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + 12 =

*