;
Athirady Tamil News

தம்பதியினரை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் கணவர் பலி!!

0

வீரகுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரகுல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த தம்பதியினரை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் கணவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (22) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த தம்பதியினர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் கணவர் உயிரிழந்துள்ளார்.

யக்கல, வீரகுல பகுதியை யசேர்ந்த 54 வயதுடைய பெரன்ஸிஸ் கப்ரால் எனும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் சந்தேக நபரை இனங்கண்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வீரகுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × two =

*