;
Athirady Tamil News

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் கலாசார பெருவிழா!! (படங்கள்)

0

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் கலை இலக்கிய கலாசார பெருவிழா!!

வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் கலை இலக்கிய கலாசார பெருவிழா இன்று (26) வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் தலைவர் சிவசிறி. சிவ.குகநாத குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

வவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலய கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களை சேர்ந்த அந்தணர்கள் மற்றும் கலைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக சமஸ்கிருதத்துறை கலைப்பீடத்தின் தலைவர் கலாநிதி மகேஸ்வரக்குருக்கள் பாலகைலாசநாத சர்மா கலந்துகொண்டிருந்தார்.

சிவச்சாரியார்கள், கலைஞர்கள் என 121 பேர் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தினால் கௌரவிக்கப்ட்டிருந்தனர்.
வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் நால்வர் சமூக சேவைக்காகவும், ஊடகப்பணிக்காகவும் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவிகளால் தமிழ் மொழி வாழ்த்தும், நிருத்திய நிகேதன நுண்கலைக்கல்லூரியின் மாணவிகளின் நடனம் மற்றும் சிவதாண்டவம், தமிழ் மாமணி தமிழருவி சிவகுமாரன் தலைமையில் சுழலும் சொற்போர் நிகழ்வும் நடைபெற்றது.

கலைநிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவிகளுக்கும் கௌரவம் வழங்கப்பட்டது.
நிகழ்வில் வைத்திய கலாநிதி வரதராஜா சுரேந்திரன், வைத்திய கலாநிதி குலசிங்கம் அகிலேந்திரன், கலாநிதி தமிழ்மணி அகளங்கன், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × four =

*