;
Athirady Tamil News

சாவகச்சேரி நுணாவில் விபத்தில் ஒருவர் பலி!! (படங்கள்)

0

ஏ 9 வீதியில் சாவகச்சேரி நுணாவில் பொது நூலகத்துக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி ஒருவர் படுகாயம். இன்று இரவு 9.40 மணியளவில் டிப்பர் கனரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் மீசாலை மேற்கைச் சேர்ந்த மகேஸ்வரன் சுரேந்திரகுமார் வயது 45 என்பவரே பலியாகியுள்ளார்.

மீசாலை மேற்கைச் சேர்ந்த கதிரேசு உதயன் வயது 35 என்பவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். டிப்பர் சாரதியை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளதோடு விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + 6 =

*