;
Athirady Tamil News

உலக கிண்ண கிரிக்கெட் – மழையால் இடைநிறுத்தம் – இலங்கை 182/8!!

0

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் கார்டிவ்வில் இடம்பெறுகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி களம் இறங்கிய இலங்கை அணி சற்று முன்னர் வரை 33 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பாக அதிகூடிய ஓட்டங்களாக குசல் பெரேரா 78 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக மொஹமட் நபி 30 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் போட்டி மழையால் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 14 =

*