;
Athirady Tamil News

முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமா – பொருளாதாரத்துக்கு தாக்கம் இல்லை!

0

அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியதால் நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாது என அமைச்சர் நவீன் திஸ்ஸாநாயக்க தெரிவித்தார்.

அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் தற்காலிகமாக நேற்றைய தினம் பதவிகளை இராஜினாமா செய்ததினால் நாட்டின் பொருளாதாரத்துக்கும் மத்திய கிழக்கு நாடுகளினாலும் பொருளாதாரத்துக்கு தாக்கம் ஏற்படுமா என்று அமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் இதனை தெரிவித்ததுடன் இந்த விடயம் அரசியலுடன் தொடர்புப்பட்டதாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டின் இஸ்திர தன்மையை சீர்குலைப்பதற்காக சிலர் அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனாலேயே தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைக்கு எந்தவித இடையூறும் இடம்பெறாது நீதியான முறையில் விசாரணை நடைபெற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

ஒரு மாத காலத்துக்குள் விசாரணைகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். உயிர்தெழுந்த ஞாயிறு சம்பவத்துக்கு பின்னர் நாட்டின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாடசாலைகள் சீரான முறையில் இயங்குகின்றன. ஆனால் சிலர் இவற்றை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.

அரசாங்கம் இதற்கு இடமளிக்காது. சகல மக்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி நாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சமகால அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. உயிர்தெழுந்த ஞாயிறு சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் இழப்பீடுகளை வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சமகால அரசாங்கத்தின் சிறந்த பொருளாதார திட்ட கொள்கை காரணமாக வீழ்ச்சி கண்டிருந்த ரூபாவின் மதிப்பு அதிகரித்துள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − twelve =

*