;
Athirady Tamil News

தெரிவுக்குழு விசாரணை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது – பொன்சேகா!!

0

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத குண்டுத் தாக்குதல்கள் குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இரண்டாம் விசாரணை இன்று இடம்பெற்றது.

இதன்போது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக .டி.சில்வா சாட்சியமளித்தார்.

இவருடைய சாட்சியங்கள் ஆரம்பிக்க முன்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சரத் பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த முதலாவது அமர்வில் இருந்து புலனாய்வு பிரிவினரின் தகவல்கள் இந்த விசாரணை மூலம் வெளிவருவதாகவும் இதனால் தேசிய பாதுகாப்பிற்கும் புலனாய்வு துறையினருக்கும் ஆபத்து என மஹிந்த ராஜபக்ஷ உட்பட எதிர்க்கட்சியினர் தெரிவித்துவருகினமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × three =

*