;
Athirady Tamil News

முஸ்லிம் தலைவர்களிடம் ஒற்றுமையைக் கற்றுக் கொள்ளுங்கள்- ஞானசார தேரர்!!

0

முஸ்லிம் தலைவர்களிடம் உள்ள ஒற்றுமை எமது சிங்களவர்களிடம் காணப்படாதுள்ளதாகவும், அவர்களைப் பார்த்து இந்த சிங்களவர்களுக்கு கற்றுக் கொள்ளச் சொல்லுங்கள் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

மூவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்த போது அனைவரும் பதவி விலகியமை தொடர்பில் தாங்கள் என்ன கூறுகின்றீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே தேரர் இவ்வாறு பதிலளித்தார்.

இதற்குத் தான் ஒற்றுமை என்று சொல்லுகின்றது. இது எமது தலைவர்களிடம் இல்லையே எனவும் தேரர் மேலும் பதிலளித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 1 =

*