;
Athirady Tamil News

ஆந்திராவில் ஜூலை 1-ம் தேதி வரை மணல் எடுக்க தடை விதிப்பு..!!

0

ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சி, சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தது. ஜெகன் மோகன் ரெட்டி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தார். அவர் பதவியேற்றதும், முந்தைய ஆட்சியின் போது எடுக்கப்பட்ட பல முடிவுகளை மறுபரிசீலனை செய்து மாற்றம் செய்யும் முயற்சியில இறங்கி உள்ளார்.

அவ்வகையில், மணல் விற்பனை கொள்கையை புதிய அரசு மாற்றிவிட்டு, வெளிப்படையான மணல் விற்பனை கொள்கையை அமல்படுத்த உள்ளது.

ஆந்திர மாநிலம் முழுவதும் வீடு கட்ட அனுமதி பெற்றவர்கள் இலவசமாக மணல் எடுத்துச் செல்லலாம் என முந்தைய அரசு அறிவித்திருந்தது. இதனால் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதால் விசாரணை நடத்த புதிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டார். அத்துடன், ஆந்திராவில் மணல் அள்ளவும் விற்பனை செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டார்.

இதுபற்றி மாநில சுரங்கத்துறை அமைச்சர் ராமச்சந்திர ரெட்டி கூறுகையில், “ஆந்திராவில் ஆறு உள்ளிட்ட இடங்களில் ஜூலை 1-ம் தேதி வரை மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறி மணல் அள்ளிச் சென்றால், அவர்கள் மீது குண்டர் சட்ட நடவடிக்கை பாயும். ஜூலை 1-ம் தேதி மணல் எடுப்பதற்கான புதிய கொள்கை கொண்டு வரப்படும்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + 9 =

*