;
Athirady Tamil News

ஹட்டன் – கொழும்பு போக்குவரத்து சேவை வழமை போல் இடம்பெற்றது!! (படங்கள்)

0

ஹட்டன் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளுக்கான இ.போ.ச. சொந்தமான போக்குவரத்து சேவை வழமை போல் இடம்பெற்றது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் 12.06.2019. புதன்கிழமை நாடுமுலுவதும் சேவையில் ஈடுபடாது என அறிவுருத்தல் வழங்கி இருந்த போதிலும் ஹட்டன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்த மான அனைத்து பேருந்துகளும் இன்றய தினம் சேவையில் ஈடுபட்டன.

இலங்கை போக்குவரத்து சபையின் கிழ் பணிபுரியும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான நிலுவை பணம் வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பதவி உயர்வு வழங்கபடாமைக்கு எதிர்ப்பு தெரிவித்துமே இன்றய தினம் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடதீர்மான எட்டபட்டபோதும் ஹட்டன் கொழும்பு ஹட்டன் கண்டி ஹட்டன் பொகவந்தலாவ மஸ்கெலியா நுவரெலியா தலாவகலை மற்றும் ஏனய பகுதிகளுக்கான இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தகள் சேவையில் ஈடுபட்டமை குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 2 =

*