;
Athirady Tamil News

சமஸ்டி கேட்டவர்கள் இபொழுது சமுர்த்தி கேட்டு திரிகிறார்கள் – சிவசக்தி ஆனந்தன்!! (படங்கள்)

0

சமஸ்டி கேட்டவர்கள் இபொழுது சமுர்த்தி கேட்டு திரிகிறார்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு

இன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் மூன்று முப்பது மணியளவில் இடம்பெற்ற புதிய தமிழ் நாதம் வாராந்தப் பத்திரிக்கை வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இன்னும் நான்கு மாதத்தில் இன்னுமொரு ஜனாதிபதி தேர்தலை சந்திக்க இருக்கின்றோம் நாம் ஜனாதிபதி பிரதமர் எமக்கு அரசியல் தீர்விற்கு உதவுவார்கள் என்று நம்பி இருந்தோம் ஆனால் நான்கு ஆண்டுகளை கடந்துவிட்ட போதும் எதுவும் நடக்கவில்லை ஜனதிபதி தேர்தல் ஒன்றை எதிர்நோக்க இருக்கின்றோம் அதற்காக மக்கள் வரிப்பணத்தில் நடைமுறைப்படுத்தப் படுகின்ற சமுர்த்தி கம்பரேலிய போன்ற திட்டங்களை சிலர் காவித் திரிகின்றார்கள் சமஸ்டி கேட்டவர்கள் இபொழுது சமுர்த்தி கேட்டு திரிகின்றார்கள் அதன விட முன்னைய அரசாங்கத்தோடு இணைந்து இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுத்த டக்லஸ் தேவானதா போன்றவர்களை விமர்சித்தவர்கள் இன்று அதனையே செய்கின்றார்கள் எனவும் தெரிவித்தார்.

இவ் பத்திரிக்கை வெளியீட்டு நிகழ்வில் பிரத விருந்தினராக மாவை சேனாதிராஜா சிறப்பு விருந்தினராக சி.சிறிதரன் தவிசாளர்களான வேழமாலிதன்,சுரேன் , வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான குருகுலராஜா தவநாதன் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 5 =

*