;
Athirady Tamil News

கொச்சிகடை புனித அந்தோனியாரின் ஆலயம் சீரமைக்கப்பட்டுத் திறப்பு!! (படங்கள்)

0

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலால் சேதமடைந்த கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் சீரமைக்கப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்காக இன்று மீளவும் திறந்துவைக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலினால் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் பெரும் சேதங்களுக்கு உள்ளானது.
தேவாலயத்தை சீரமைக்கும் பணிகளை கடற்படையினர் முன்னெடுத்திருந்தனர். சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு வழிபாடுகளுடன் புனித அந்தோனியார் ஆலயம் திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிலையில் கொச்சிக்கடை புனித அந்தோனியாரின் வருடாந்த திருவிழா நாளை ஆரம்பிக்க ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பலி பூஜை, கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × three =

*