;
Athirady Tamil News

மத்திய பிரதேச முன்னாள் அமைச்சர் மாரடைப்பால் மரணம்..!!

0

மத்திய பிரதேச மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சிவநாராயணன் மீனா மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். அவருடைய வயது 68.

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று இரவு புனித யாத்திரை மேற்கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவநாராயணன் மீனாவின் மறைவிற்கு மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் உட்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மறைந்த முன்னாள் அமைச்சர் சிவநாராயணன் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான மத்திய பிரதேச மாநிலம் கிடாகெடி கிராமத்தில் நாளை நடைபெற உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × three =

*