;
Athirady Tamil News

யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை மின்சாரம் தடை!!

0

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(13) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சாரசபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை-08.30 மணி முதல் மாலை- 05 மணி வரை யாழ். நீர்வேலி கந்தசுவாமி கோயில் பிரதேசம், நாவற்குழி, கேரதீவு வீதி, தச்சன் தோப்பு, கோகிலாக் கண்டி, மறவன்புலவு, தனங்கிளப்பு, அறுகுவேலி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 15 =

*