;
Athirady Tamil News

அச்சுவேலி மீனாட்சி அம்மன் மஹா கும்பாபிஷேகம்!! (படங்கள்)

0

அச்சுவேலி தெற்கு மருத்துவமனைச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலின்; மஹாகும்பாபிஷேக விழா இன்று 12.06.2019 காலை நடைபெற்றது. ஸ்ரீமீனாட்சி, விநாயகர், முருகன், வைரவர் ஆகிய மூர்த்தங்களுக்கான யாக சாலைகள் அமைக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை தொடக்கம் கிரியைகள் இடம்பெற்றன.
இன்று காலை 11.40 மணிக்கு பிரதான கும்ப அபிஷேகம் இடம்பெற்றது.
.
அதனைத்தொடர்ந்து தசதரிசனம், குருமார் மற்றும் கலைஞர் கௌரவிப்பு, மகாபிஷேகம் என்பன இடம்பெற்றன.

கும்பாபிஷேக நிகழ்வுகளின் பிரதம குருவாக சிவஸ்ரீ மு.பிரசன்னக் குருக்கள் செயற்பட்டார். இவருடன் சிவஸ்ரீ யோகானந்தேஸ்வரக் குருக்கள், சிவஸ்ரீ வி.கஜேந்திரக் குருக்கள், சிவஸ்ரீ சிவசாமிக் குருக்கள், சிவஸ்ரீ சுதாகரக் குருக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். சர்வசாதகாசாரியார்களாக சிவஸ்ரீ ப.சிவானந்தசர்மா (கோப்பாய் சிவம்), சிவஸ்ரீ வத்சன் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர். ஆலய முன்னாள் குரு அமரர் தியாகராஜக் குருக்களின் புதல்வர் சிவஸ்ரீ கிருபாகரசர்மாவும் கிரியைகளில் பங்கேற்றார். ஆலய அர்ச்சகர் சிவஸ்ரீ ச.லோகேஸ்வர சர்மா நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.
.
கௌரவிப்பு நிகழ்வுகள் கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசன் தலைமையில் நடைபெற்றது.
.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து பன்னிரு தினங்கள் பிற்பகல் 3 மணிக்கு மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 − two =

*