;
Athirady Tamil News

ஹீல்ஸ் அணிய வற்புறுத்தும் நிறுவனங்கள்- இது ஒரு பாலினபாகுபாடு என்கின்றனர் பெண்கள்..!!

0

ஜப்பானில் பெண்கள் ஹீல்ஸ் அணிவதை எதிர்த்து போராட துவங்கி உள்ளனர்.

ஜப்பானில் அலுவலகங்களில் பெண்கள் ஹீல்ஸ் அணிய தொடர்ந்து வற்புறுத்தபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. தொடர்ந்து பல பெண்கள் ஹீல்ஸ் அணிவதனால் கடுமையான வலியையும் உணர்ந்துள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து யூமி இஷ்காவா என்ற பெண் சமூக ஊடக பிரச்சாரத்தை துவங்கி உள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில் இது பாலின பாகுபாடு என்பதை அனைவரும் உணர வேண்டும் என்கிறார்.

நாம் இதை பற்றி கோவப்பட வேண்டும். ஆனால் பலர் இதை பெறுத்து கொண்டு வாழ கற்றுகொண்டுள்ளோம்.

இதுகுறித்து, 18,000க்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்து பெற்று யூமி அதை அரசிடம் ஒப்படைத்துள்ளார். அதில் அலுவலகங்களில் ஹுல்ஸ் அணிய வற்புறுத்தகூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சுகாதாரத்துறை மற்றும் தொழில் துறை அமைச்சகம் இதை ஏற்க மறுத்துள்ளது. மேலும், பணியிடங்களில் ஹீல்ஸ் அணியும் முறை சரியானது என்று அது தெரிவித்துள்ளது.

இதுபோன்ற பாகுபாடு பல நாடுகளில் வழக்கத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × four =

*