;
Athirady Tamil News

துபாயில் 11 வயது சிறுமியிடம் சில்மிஷம்… 29 வயது இளைஞனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை..!!

0

துபாயில் தனியாக இருந்த 11 வயது இந்திய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மோராக்கோவைச் சேர்ந்த 29 வயது இளைஞன் ஒருவன் துபாயின் Naif பகுதியில் இருக்கும் Freej Al Murar என்ற ஸ்டோருக்கு சென்றுள்ளான். அதே ஸ்டோருக்கு 11 வயது சிறுமி(இந்தியா) ஒருவர் உறவினர்களுடன் சென்றிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது சிறுமி தனியாக நின்று கொண்டிருந்த போது, அந்த இளைஞன் அவரை கட்டிப் பிடிப்பது, கண்ட இடங்களில் தொடுவது போன்று இருந்துள்ளான்.

இதனால் அந்த சிறுமி வீட்டிற்கு சென்றவுடன், அங்கிருந்த தனது அத்தையிடம் இதைப் பற்றி கூறி அழுதுள்ளார். அதன் பின் அந்த சிறுமியின் தந்தை உடனடியாக காவல்நிலையத்தில் இதைப் பற்றி புகார் தெரிவிக்க, சம்பவம் இடத்திற்கு சென்ற பொலிசார் அங்கிருந்த சிசிடிவி கமெராவைப் பார்த்து அடையாளம் கண்டு அந்த நபரை கண்டு பிடித்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அந்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும், அதன் பின் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × five =

*