;
Athirady Tamil News

பிரசவத்திற்கு செல்லும் பெண்களுக்கு தெரியாமலே கருத்தடை அறுவை சிகிச்சை: தொடரும் அராஜகம்..!!

0

கனடாவில் பூர்வக்குடியின பெண்கள் காணாமல் போவதும் கொலை செய்யப்படுவதும் தொடரும் நிலையில், பிரசவத்திற்கு செல்லும் பெண்களுக்கு தெரியாமலே கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் அராஜகம் இன்னமும் தொடர்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பூர்வக்குடியின பெண்களின் பிரதிநிதியான ஒரு வழக்கறிஞர், பிரசவத்திற்கு செல்லும் பெண்களுக்கு தெரியாமலே கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிப்பதோடு,காணாமல் போன மற்றும் கொல்லப்பட்ட பூர்வக்குடியின பெண்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள தேசிய அமைப்பு (MMIWG), தனது விசாரணையில் கண்டுபிடித்துள்ள விடயங்களில் இதையும் ஒரு பிரச்சினையாக முவைத்துள்ளதில் ஆச்சரியம் எதுவும் இல்லை என்கிறார்.

231 பரிந்துரைகளை முன்வைத்துள்ள அந்த ஆணையம், பூர்வக்குடியின பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான வன்முறை குறித்தும் விசாரிக்குமாறு அரசால் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது

வழக்கறிஞர் Alisa Lombard, பிரசவத்திற்கு செல்லும் பெண்களுக்கு தெரியாமலே கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் குற்றமும், அவர்களுக்கு இழைக்கப்படும் வன்முறை என்ற பட்டியலின் கீழேயே வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆல்பர்ட்டாவும் பிரிட்டிஷ் கொலம்பியாவும் 1970களிலேயே பெண்களுக்கு தெரியாமலே கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது நிறுத்தப்பட்டு விட்டதாக தெரிவித்தாலும், நாடு முழுவதும் உள்ள பூர்வக்குடியின பெண்கள், இன்றும் தங்களுக்கு நேரும் கொடுமைகளை கதை கதையாய் சொல்கிறார்கள்.

பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு ஆவன செய்வதோடு, சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கவும், மேலும் பூர்வக்குடியின பெண்களுக்கு இத்தகைய அநீதி நிகழாமல் தடுக்கவும் அரசு உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் Alisa Lombard

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + 18 =

*