;
Athirady Tamil News

ஒரு தொகை போதைப் பொருட்களுடன் 2 பேர் கைது!!

0

ஒரு தொகை போதைப் பொருட்களுடன் சீதுவை பிரதேசத்தில் இருந்து 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

சுமார் ஒன்றரை கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 12 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 500 போதை மாத்திரைகளும், பிஸ்டோல் ஒன்றும் அதற்கான தோட்டக்க 07உம் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் பெறுமதி சுமார் 02 கோடி ரூபாவுக்கும் அதிகமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + eleven =

*