;
Athirady Tamil News

விளையாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்!!

0

ஹொரண நகரில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றை கொள்ளையிட முற்பட்ட நபர் ஒருவரை பொலிஸார் சுட்டதில் குறித்த நபர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (16) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிதி நிறுவனத்திற்கு கொள்ளையிட வந்த நபர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கியை நீட்டிய போது உடனடியாக செயற்பட்ட பொலிஸார் குறித்த நபரின் காலில் சுட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் பொலிஸ் பாதுகாப்புடன் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் பொகுனுவிட, மிமின பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த நபரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது பிலாஸ்டிக் விளையாட்டு துப்பாக்கி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − 13 =

*