;
Athirady Tamil News

அனுராதபுரம் – மிஹிந்தலை ஆகிய பிரதேசங்களில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்!!

0

பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு அனுராதபுரம் – மிஹிந்தலை ஆகிய பிரதேசங்களில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக நான்காயிரத்திற்கு மேற்பட்ட பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக முப்படை மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

அனுராதபுரம் நகரத்தில் 20 இடங்களில் வாகனத் தரிப்பிற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் மிஹிந்தலை நகரத்திலும் இவ்வாறு 6 இடங்களில் வாகனத் தரிப்பிற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 3 =

*