;
Athirady Tamil News

வலி தெற்கு வர்த்தகர்களுக்கான தேவைப்பாடுகள் தொடர்பான கூட்டம்!! (படங்கள்)

0

உடுவில் பிரதேச செயலரின் ஏற்பாட்டில் வலி தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வர்த்தகர்களுக்கான நலன்சார் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பான கூட்டம் நேற்று இடம்பெற்றது. உடுவில் பிரதேச செயலகரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலரின் அழைப்பில் வலி தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் க.தர்ஷன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தர்த்தனின் இணைப்புச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் வலி தெற்கு வர்த்தகர்களுடைய தேவைப்பாடுகள் மற்றும் இன்னோரன்ன விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதோடு வர்த்தகர்களினுடைய கோரிக்கைக்கிணங்க உடுவில் பிரதேச செயலகர் மற்றும் வலிதெற்கு பிரதேச சபைத் தலைவர் ஆகியோர் முன்னிலையில் புதிய வர்த்தக சங்கமும் தெரிவு செய்யப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 − three =

*