;
Athirady Tamil News

தேர்தலை நடத்த கோரும் சத்ய கவேஷகயோ அமைப்பின் வழக்கு செம்டெம்பர் 9 விசாரணைக்கு!!

0

மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் திணைக்களத்துக்கு அறிவுறுத்துமாறு வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் சத்ய கவேஷகயோ அமைப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனு செம்டெம்பர் 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மனுவில் பிரதிவாதியாக தேர்தல்கள் திணைக்களம், தேர்தல் ஆணையாளர் மற்றும் உறுப்பினர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லை நிர்ணயம் என்று கூறிக்கொண்டு தேர்தலை தற்போதைய அரசாங்க பிற்போடுவதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் 6 மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதுடன் இதனால் மக்களின் சர்வஜன வாக்குரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் திணைக்களத்துக்கு அறிவுறுத்துமாறு வலியுறுத்தி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 3 =

*