;
Athirady Tamil News

வவுனியாவில் 1929 தொலைபேசி இலக்கத்திற்கு 18 முறைப்பாடுகள்!!

0

வவுனியா மாவட்டத்தில் இவ்வருடத்தில் முதல் நான்கு மாதத்தில் 1929 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு 18 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட உளசமூக உத்தியோகத்தர் செ.நந்தசீலன் தெரிவித்தார்.

சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக அவரிடம் வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

1929 என்ற சிறுவர் உதவி தொலைபேசி இலக்கதிற்கு இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் 18 முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. இம் முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாராசபைக்கு நேரடியாக கிடைக்கப்பெற்றவையாகவுள்ளதுடன் அவற்றில் அதிகளவானவை வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் இருந்தே கிடைத்துள்ளன.

இவ் முறைப்பாடுகள் சம்பவம் இடம்பெறும் வீடுகளுக்கு அருகில் உள்ளவர்கள், பாடசாலை சமூகம் மற்றும் மருத்துவ மாதுக்களால் கூடுதலாக கிடைக்கப்பெறுவதுடன் பாடசாலை இடைவிலகல் தொடர்பான முறைப்பாட்டு பதிவுகளே அவற்றில் அதிகளவானவை எனவும் அவர் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 5 =

*