;
Athirady Tamil News

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரிட்டன் நாவலாசிரியர் இறந்த தினம்: ஜூன் 19- 1993..!!

0

சர் வில்லியம் கோல்டிங் (செப்டம்பர் 19, 1911- ஜூன் 19, 1993) இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய நாவலாசிரியர் இவரது படைப்புக்களில் மிகவும் பிரபலமானது லார்ட் ஆஃவ் தி பிளைஸ் (Lord of the Flies) என்பதாகும்

பட்டப்படிப்பைத் தொடர்ந்த காலத்திலேயே (1934) தனது முதற் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் 1961-ன் பின்னர் முழுநேர எழுத்தாளரானார். 1980-ல் ரைட்ஸ் ஆஃவ் பேசேஜ் (Rites of Passage) நாவலுக்காக புக்கர் பரிசு பெற்ற இவர் 1983-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசும் பெற்றார். 1988-ல் சர் பட்டம் பெற்றார். 1993-ல் காலமானார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பிலிப்பைன்ஸ் கடல் சமர் இடம்பெற்றது. * 1953 – அமெரிக்காவின் அணுவாயுத ரகசியங்களை சோவியத் ஒன்றியத்துக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜூலியஸ் மற்றும் எத்தல் ரோசன்பேர்க் என்ற யூதத் தம்பதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

* 1961 – குவைத் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது. * 1987 – ஸ்பெயினில் கடைத்தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 21 பேர்ர் கொல்லப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 6 =

*