;
Athirady Tamil News

சஹ்ரான் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்ட சஹ்லான் மௌலவி!!

0

இலங்கை நாட்டை முஸ்லிம்கள் கைப்பற்றி இலங்கையில் இஸ்லாமிய கொடியை பறக்க விட வேண்டும் என சஹ்ரான் தெரிவித்திருந்ததாக காத்தான்குடியைச் சேர்ந்த மௌலவி கலிலூர் ரஹ்மான் மொஹமட் சஹலான் என்பவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (18) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2013 – 2015 ஆண்டுக்காலப்பகுதியில் சூபி முஸ்லிம்களின் மத அனுஷ்டானங்கள் மற்றும் கொள்கைகளை அவமானப்படுத்தி சூபி முஸ்லிம்கள் மதம் மாறியவர்கள் அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல என சஹ்ரான் ஹசீம் பிரச்சாரம் செய்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சூபி முஸ்லிம்கள் வருடத்திற்கு 15 முறை அன்னதானம் வழங்குவதாகவும் வருடத்தில் ஒரு முறை பெரிய அளவிலான அன்னதானம் ஒன்றை வழங்குவதாகவும் தெரிவித்த அவர், குறித்த அன்னதானத்தில் வழங்கப்படும் உணவை முஸ்லிம்கள் உண்ணக்கூடாது எனவும் அது உண்பது பன்றி இறைச்சியை உண்பதற்கு சமானானது எனவும் சஹ்ரான் தனது தவ்ஹீத் என்ற நாளிதலில் கருத்துக்களை தெரிவித்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் காத்துன்குடி பொலிஸ் நிலையத்தில் 11 முறைப்பாடுகள் செய்ததாகவும் அதன் முறைப்பாடுகளின் அடிப்படையில் 27.10.2014 ஆம் ஆண்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2015 ஆம் ஆண்டு சஹ்ரான் ஹசீம் தேர்தலின் போது வேட்பாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து ஒப்பற்தம் ஒன்றை செய்து கொண்டதாகவும் அந்த ஒப்பந்தத்தில் பல்வேறு அடிப்படைவாத கருத்துக்கள் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்​.

இந்த ஒப்பந்தத்தில் கத்தான்குடி தொகுதி உறுப்பினர்களான சாபி சாலி, சிப்லி பாரூக், ஏ.எல்.எம் ஹிஸ்புல்லா, ஏ.எல்.எம் ரூபி மற்றும் அப்துர் ரஹ்மான் ஆகியோர் கைச்சாட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2015 ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது சஹ்ரான் ஹசீம் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவும் செயற்பட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 2016 மற்றும் 2017 ஆண்டுக்காலப்பகுதிகளில் இலங்கை நாட்டிற்கும் தேச பற்றிற்கும் எதிராக சஹ்ரான் உரையாற்றியதாகவும் அந்த காலப்பகுதியில் இடம்பெற்ற மூன்று நிகழ்வுகளின் போது முஸ்லிம் அல்லாதவர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என தெரிவித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் 2016 ஆம் ஆண்டிற்கு முன்னர் இவ்வாறான தீவிரவாத கருத்துக்களை தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டிருந்த அவர், 2016 ஆம் ஆண்டி டிசம்பர் மாதம் முதல் தடவையாக அவர் பகிரங்கமாக இந்த கருத்துக்களை ஹிஸ்புல்லா கலச்சார மண்டபத்தில் வைத்து தெரிவித்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசப்பற்று என்பது இஸ்லாமிய ஆட்சிக்கு எதிரானது எனவும் அவர்கள் ISIS என்பதையே இஸ்லாமிய ஆட்சி எனக்கூறியோக தாங்கள் கருதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாய் நாட்டை நேசிப்பவர்கள் முஸ்லிம்களாக இருக்க முடியாது எனவும் தேசிய கொடியை ஏற்றுவது இஸ்லாமிய ஆட்சியை பாதிக்கும் எனவும் இலங்கை நாட்டை முஸ்லிம்கள் கைப்பற்றி இலங்கையில் இஸ்லாமிய கொடியை பறக்க விட வேண்டும் என தெரிவித்தாகவும் சஹ்ரான் குறிப்பிட்டிருந்தாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சூபி முஸ்லிம்கள் மீது தொடர்ச்சியாக பிரச்சினைகள் வருவதாகவும் அவர் கண்ணீர் மல்க கருத்து தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + sixteen =

*