;
Athirady Tamil News

யாழ். வண்ணை வீரமாகாளியம்மன் ஆலய மகோற்சவ பெருந்திருவிழா!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் – வண்ணை வீரமாகாளியம்மன் ஆலய மகோற்சவ பெருந்திருவிழா இன்று (22.06.2019) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

தொடர்ந்தும் 25 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்- 09 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மஞ்சத் திருவிழாவும், 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கைலாய வாகன உற்சவமும், 13 ஆம் திகதி சனிக்கிழமை காலை வேட்டைத் திருவிழாவும், 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை சப்பறத் திருவிழாவும், 15 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-09 மணிக்குத் தேர்த் திருவிழாவும் , மறுநாள் காலை-09 மணியளவில் காளிஹா தீர்த்த புஷ்கரணியில் தீர்த்தவாரியும், மாலை-06 மணியளவில் கொடியிறக்க வைபவமும் இடம்பெறும்.

தினசரி காலை உற்சவம் காலை-08 மணியளவில் கும்ப பூசையுடன் ஆரம்பமாகி நண்பகல்-12 மணியளவில் உச்சிக்காலப் பூசையுடன் நிறைவு பெறும். மாலை உற்சவம் மாலை-04 மணியளவில் கும்ப பூசையுடன் ஆரம்பமாகி இரவு-08 மணியுடன் நிறைவுபெறும்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − ten =

*