;
Athirady Tamil News

‘ விசாரணைகள் நிறைவடையும் வரை பொறுப்பேற்க மாட்டேன் ‘ !!

0

தனக்கு எதிரான விசாரணை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை, எவ்விதத்திலும் அமைச்சுப் பதவி​களை பொறுப்பேற்கமாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பொறுப்புகளை பெறுவதற்கு தமக்கு அவ்வளவு அவசரம் இல்லையென்றும், முதலில் இடம்பெறும் விசாரணைகளின் அறிக்கை கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் எந்த நேரத்திலும் அனைத்து விசாரணைகளுக்கு தயாராகவிருப்பதுடன், அதற்கான ஒத்துழைப்பை வழங்கவும் தயாராகவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × three =

*